உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால் தயாரிப்பாளர் புண்ணியத்தால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என நம்மை கடலோடு மிதக்க வய்க்கும் படம்................ஸ்டார் குருஸ் கப்பலை (உலகை) கமரா கண்ணால்அள்ளிக் கொடுத்த விதம் அழகோ அழகு
நடிகர் கமலஹாசனை விட இந்த படத்தில் அதிகம் என்னை தொட்டவர் வசனகர்த்தா கமலஹாசன். ஒவ்வொரு வசனமும் அர்த்தம் நிரம்பியதும். வசனங்கள் நம்மை கடந்த பின்னும் மனசுக்குள் அப்படியே அமர்ந்து கொள்கிறது.
கதை மிக சாதாரணமானது என்றாலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் மன்மதன் அம்பை படு ஹை டெக்கான படமாக மாற்றியிருப்பதை மறுக்க முடியாது. முக்கியமாக 'நீல வானம்' பாடல். முதன் முதலில் இந்த பாடலை ஆடியோவில் மட்டும் கேட்கும் போது ஓரளவுக்கு பிடித்த பாடல் ஆனால் இந்த படத்தின் மாஸ்டர் பீஸ் அந்த பாடல்தான். "லெட்ரோகிராபி" முறையில் பாடல் முழுதும் பிளாஷ்பேக்கில் செல்ல அதை செதுக்கியிருக்கும் விதம் படு பிரமிப்பு.
ஆரம்பித்தில் வரும் ஆங்கில பாடல் தீம் இசையிலும் மனம் கவர்கிறது
மொத்தத்தில் இது ஒரு Holiday மீண்டும் ஒரு திரையில் காண வேண்டிய ஒரு CLOUR FULL MOVE




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக