நானும் பார்க்க நினைத்து அடிபட்டு house full என்ற பெரோடு 6.30 ஷோ பார்த்த படம் .
நான் நினைத்ததை விட வேறொரு விசயங்க அது டெர்மினேட்டர், அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்க்கும் போதெல்லாம், “தமிழில் இப்படியெல்லாம் படமெடுப்பது சாத்தியம்தானா……?”எனும் பொது நான் இருககன் என சங்கர் சொன்ன படம்.
மனிதன் இட்ட கட்டளைப்படி இயங்கும் ரோபோ தன்னுடைய சிந்தனைகளின் படி இயங்க ஆரம்பித்தால், ரோபோக்களுக்கும் மனிதனைப்போல உணர்ச்சிகள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் இதுதாங்க படத்தோட ஒன்லைன்...
ஆர்ப்பாட்டமே இல்லாத அறிமுக காட்சி பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் கிடையாது படத்தில், விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி என இருவேடங்கள் சூப்பர்ஸ்டாருக்கு. வயசானாலும் இன்னும் இவரோட ஸ்டைலும் வேகமும் இவரைவிட்டு இன்னும் போகவே இல்லை.(கல்யாண வீட்டுல ரோபோ ரஜனி நடந்து வருவாரு பாருங்க )
| நான் எடுத்த டிக்கட் |

35 வயசான என்ன ? என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்தான்யா . ரோபோ ரஜினிக்கு தன் மீது வரும் ஒரு விதமான ஈர்ப்பு பின் அது தவறென ரோபோ ரஜினிக்கு புரியவைக்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த 50கிலோ தாஜ்.

காதல் அணுக்கள் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட லொக்கேசன்களும் கண்ணுக்கு விருந்து .
ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும் ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்கு மட்டுமே நான் குடுத்து விட்டு போன காசு முடிந்து போச்சு.
முக்கியமாக ஹனீபா, கலாபவன் மணி ஆகிய இருவரும் வரும் இடங்கள் அட்டகாசம்(sangarukku மட்டும் தெரிந்த ரகசியம் நடிகர் தெரிவு)
பூம் பூம் ரோபோடா இந்த வருடம் குழந்தைகளின் விருப்பப்பாடல்களாக மாறப்போவதில் ஆச்சரியமில்லை . புதிய மனிதா , கிளி மாஞ்சாரோ பாடல்களும் கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது. பின்னணி இசையிலும் விளையாடியிருக்கிறார் இசைப்புயல்.இன்னும் ரோபோக்கள் துப்பாக்கி சுடும் சண்டைகாட்சிகளில் வரும் சத்தம் ..............................................
இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.கோவிலில் ஸ்பீக்கர் கட்டி கூத்தடிக்கும் வேறொரு கும்பலை 'நிராயுதபாணி'யாக்குகிற காட்சியில் ரோபோவை வேப்பிலை அடிக்காத குறையாக பக்தியழுக பார்க்கும் பெண்மணிகளும், ரஜினியின் 'ஆத்தா கோலமும்' கூட அதிர வைக்கிறது தியேட்டரை. அந்த ரயில் சண்டை வினாடிக்கு வினாடி பிரமிப்பு.

ரசிகர்கள், சினிமா விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன் டாட்..................................பாருங்கள் தியட்டரில் மட்டும் மட்டும்தான்
http://www.amazingonly.com/amazing/top-60-photos-of-robot-enthiran-stills/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக