வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாதபையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் ஸ்பெஷல் ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள்.
புதன், 25 ஆகஸ்ட், 2010
நான் பார்த்த .....நான் மகான் அல்ல .....
வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம்.
யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட். வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் இயல்பான வசனங்க்ளூம் +++++++ திசை மாறாத விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை. ஜாலியாய் போய்க் கொண்டிருக்கும் ஒரு படத்தை சட்டென வேறொரு மூடுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை பயணிக்க வைத்ததில் ஜெயித்துமிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக